We will fetch book names as per the search key...
| Seller | Price | |
|---|---|---|
| StoryMirror Best price | ₹99 | |
| Amazon | Price not available | |
| Flipkart | Price not available |
உள்-ஒளி:
“ கற்றிடுவோம் புதிய கல்வி எனும் வேதாத்திரி மகரிஷி வாக்கிற்கிணங்க இந்நூல் ஒரு புதிய கல்வியின் ஆரம்பமாகத் திகழ்கிறது. இந்நூலின் சாரம் படிப்போர்களின் உள்ளொளியைத் தூண்டும் வண்ணம் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பாகும் “ - முனைவர்.கோ.அழகர் ராமானுஜம் ,நிறுவனர்,வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமம் , பேரளம்.
“ கவிதைகள் பலவற்றில் ஆன்ம வெளிச்சம் பளிச்சிடுகிறது . உயர்ந்த வேதாந்த விஷயங்களும் வெளிப்படுகின்றன .சில கவனிக்க வேண்டிய சமூக பிரச்சனைகளின் மீதும், குறிப்பாக இன்றைய வாழ்க்கை முறை – திருமண உறவுகள் குறித்த ஆழமும் யதார்த்தமும் நம்மை சிந்திக்க வைக்கின்றன “ - எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர், ஆலய தரிசனம் .
“ பரிசளித்து மகிழ வேண்டிய நூல்கள் இவை என்பதை விட பரவசமடைய படிக்க வேண்டிய நூல்கள் என்பதே சாலப் பொருந்தும் “ – மரு.சு.அசோகன் , ரோகிணி ஆயுர்வேத மருத்துவமனை , சென்னை .
நூலாசிரியர் குறிப்பு :
நூலாசிரியர் மனோஹரன் கேசவன், (புனைப்பெயர் : யோகி ) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சார்ந்தவர்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மாணாக்கர்.முதுநிலை யோகா பயின்றவர்.
யோகா,தியானம், தத்துவம்,உடல்நலம், மனவளம்,வர்மா,ஹீலிங், கை தொடு சிகிட்சை, அக்குபஞ்சர், மூலிகை மருத்துவம் முதலியவற்றின் மூலமாக சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை ஆற்றி வருபவர்.
தற்பொழுது ரிலையன்ஸ் கம்பனியில் பணியாற்றி வருபவர்.
இவரின் முதல் கவிதை நூல் “ சுயம் – ஒரு தேடலின் தொடக்கம் “ 2013-ம் ஆண்டில் வெளிவந்தது .
இவரின் இரண்டாம் கவிதை நூல் “ உள் ஒளி – உண்மை உணர்வுக்கும் உன்னத வாழ்க்கைக்கும் “ 2016-ம் ஆண்டில் வெளிவந்தது .
இவ்விரண்டு நூல்களும் வேதாத்திரி மகரிஷி ஆஸ்ரமத்தின் நிறுவனரும் பேராசிரியருமான திரு.அழகர் ராமானுஜம் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது இந்நூல்களுக்கு மணிமகுடமாய் அமைந்தது.