We will fetch book names as per the search key...
அன்புள்ள வாசகர்களே,
உங்களுக்குத் தெரியும், ஒரு எழுத்தாளரின் பயணம் எவ்வளவு தனிமையானது என்று. ஒரு எழுத்தாளர் மற்றவர்களை விட படிப்பதிலும், ஆய்வு செய்வதிலும், சிறந்த கதைகள் அல்லது கவிதைகளை எழுதுவதிலும் மும்மரமாக இருப்பார்.
அவருடைய எழுதுக்களை படிப்பதால் அல்லது அவருடன் உரையாடுவதால் அவருடைய அறிவின் ஞானம் பல நபருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும், தற்போதைய "டிஜிட்டல்" சகாப்தத்தில், எழுதும் திறமைகள் இருந்தும், அதை வெளிப்படுத்த சரியான தளம் அமையாததால் சக்திவாய்ந்த பல படைப்புகள் கவனத்திற்கே வராமல் எங்கோ ஒரு இடத்தில் அடைந்து, மறைந்து விடுகிறது. அது அந்த படைப்பின் உழைப்பை மறைத்தும் விடுகிறது.
ஸ்டோரி மிரர் வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஆக்கப்பூர்வமான முறையில் இணைக்கும் நோக்கத்துடன் தொடங்கிய ஒரு இணைய மேடை ஆகும்.
எழுத்தாளர்களுக்கு எழுதும் சேவையை மட்டும் வழங்கிய நிறுவனம், தற்போது, மின்னிதழை (இ-பத்திரிக்கை) அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆசிரிய-வாசக உறவை ஒன்றிணைக்கும் கருவியாக செயல்பட உள்ளது.
மின் இதழின் பெயர், "ஸ்டோரி மிரர் டைஜஸ்ட்" - இது ஒரு மாதாந்திர இலக்கிய இதழ் ஆகும், அதில் பதிப்பாசிரியர்கள் தேர்வு செய்த சிறந்த உள்ளடக்கங்கள் மட்டுமே இடம்பெறும். அதனால் மின்னிதழை படிக்கும் போது சிறு தொய்வும் ஏற்படாது. விறுவிறுப்பாக இருக்கும்.
இதனுடன் அடுத்து வரும் நாட்களில், சில பழைய கிளாசிக் கதைகள், கவிதை தொகுப்புகள், வரவிருக்கும் போட்டிகளின் அறிவிப்புகள், வாசகர்களிடம் இருந்து பெறும் மதிப்புரைகள், கலந்துரையாடல்கள், மன்றங்கள் மற்றும் எழுத்தாளரின் நேர்காணல்கள் போன்றவற்றை தொகுத்து, சிறந்த அறிவும் மற்றும் பொழுதுபோக்கும் கொண்ட ஒரு மின்னிதழாய் வெளிக்கொண்டு வருவோம் என்பதை உறுதியளிக்கிறோம்.
ஸ்டோரி மிரரில் இலவச மின்-பத்திரிகையைப் பெறுவதற்கான செயல்முறை:
1. ஸ்டோரி மிரர் செயலியில் உள்நுழைக.
2. ஸ்டோரி மிரர் ஷாப் இணைப்புக்கு (https://shop.storymirror.com) செல்லவும்.
3. மின் பத்திரிகையை தேடவும் மற்றும் பதிவிறக்கவும்.
4. பதிவிறக்கம் செய்யப்பட்டதும், ஸ்டோரி மிரர் ஆண்ட்ராய்டு மற்றும் iOS செயலி பயன்பாட்டின் உதவியுடன் மின்-இதழை ஆனந்தமாய் படியுங்கள்.
பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் மின்-இதழை ஆஃப்லைனிலும் படிக்கலாம்.
இந்த மின்-பத்திரிக்கையை மேன் மேலும் சிறப்பாக மேம்படுத்த உங்கள் கருத்துக்களுக்கு நாங்கள் செவி சாய்க்க விரும்புகிறோம்.
பத்திரிக்கையின் உள்ளடக்க தேர்வுக் குழுவில் நீங்கள் இடம்பெற விரும்பினால், உங்கள் பெயரை பரிந்துரைக்கவும்.
இலக்கியத்தின் ஆதரவுடன் ஒரு சிறந்த ஆக்கபூர்வமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
ஸ்டோரி மிரர் குழு